ரஜினி, கமலை தொடர்ந்து பிரபல நடிகருக்கு உதவிய எஸ்.வி.சேகர்! உருக்கமாக விடுத்த வேண்டுகோள்!

ரஜினி, கமலை தொடர்ந்து பிரபல நடிகருக்கு உதவிய எஸ்.வி.சேகர்! உருக்கமாக விடுத்த வேண்டுகோள்!


Sv sekar gave 25000 money for ponnampalam treatment

தமிழ் சினிமாவில் ஏராளமான  திரைப்படங்களில் நடித்து முன்னணி வில்லன் நடிகராக இருந்தவர் நடிகர் பொன்னம்பலம். இவர் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் கொடூர வில்லனாக நடித்துள்ளார். 

பின்னர் கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் எதுவுமின்றி இருந்துவந்த நடிகர் பொன்னம்பலம் விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டுள்ளார். 

sv sekar

இந்நிலையில் நடிகர் பொன்னம்பலம் கடந்த சில காலங்களுக்கு முன்பு சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அடையாறில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பிரபலங்கள் முன்வந்து நிதியுதவி அளித்து உதவி செய்தனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் எஸ்வி சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரபல ஸ்டண்ட் நடிகர் பொன்னம்பலம் கிட்னி செயலிழப்பால் டயாலிசிஸ் நிலையில் உள்ளார். என் டிரஸ்ட் மூலமாக ஒரு சிறுதொகை வழங்கியுள்ளேன். நல்ல மனம் படைத்தவர் அவருடைய வங்கி கணக்கில் பணம் அனுப்பி உதவலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் பொன்னம்பலத்தின் வங்கி விவரங்களுடன், தான் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்த செக்கின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.