தன்னை விட 16 வயது குறைந்த விளம்பர மாடலை மணக்கும் பிரபல நடிகை.! பச்சைக்கொடி காட்டிய மகள்கள்!!

பாலிவுட் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சுஷ்மிதா சென். இவர் 1994 ல் பிரபஞ்ச அழகி பட்டத்தை பெற்றவர், மேலும் பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற முதல் இந்திய பெண் சுஷ்மிதா சென் ஆவார்.
சுஷ்மிதா சென் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றதும், நடிகையாக களமிறங்கினார். இவரது முதல் படம் தஸ்தக். 1996 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் அவர் நன்றாக நடித்து இருந்த நிலையிலும் படம் சரியாக ஓடவில்லை.
இந்நிலையில் சுஷ்மிதா சென் நாகார்ஜூனாவுடன் இணைந்து ரட்சகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து இவருக்கென பெரும் ரசிகர்கள் உருவாகினர்.
சுஷ்மிதாசென் நடிப்பு மட்டுமின்றி சமூக நலனிலும் மிகவும் அக்கறை கொண்டுள்ளார். மேலும் அவர் இருபெண்குழந்தைகளை தத்தெடுத்து அன்போடு வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் சுஷ்மிதா சென் பிரபல விளம்பர மாடல் ரோமன் ஷால் என்பவரை கடந்த இரு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ரோமன் சுஷ்மிதாவை விட 19 வயது குறைந்தவர். இந்நிலையில் இவர்கள் இருவரும் நவம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனது இருமகள்கள் சம்மதம் தெரிவித்தபிறகே திருமணம் செய்ய முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.