சினிமா

காதலியுடன் இருக்கும் கடைசி புகைப்படம்..! வரும் நவம்பர் மாதம் திருமண ஏற்பாடு..! சுஷாந்தின் மரணத்தில் நடந்தது என்ன..?

Summary:

Sushant Singh Rajputs Last Pic With Rhea Chakraborty Goes Viral

தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு உருவான தோனியின் சுயசரிதை படத்தில் ஹீரோவாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்பத்தியுள்ளது.

மனஅழுத்தம் காரணமாக சுஷாந்த் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படும்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், தீவிர விசாரணை வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே சுஷாந்தின் கடைசி பதிவு, புகைப்படம், வீடியோ போன்றவற்றை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சுஷாந்த் சிங் உடற்பயிற்சி செய்துவிட்டு அவர் காதலிப்பதாக கூறப்படும் நடிகை Rhea Chakraborty உடன் ஜிமில் இருந்து வெளியேறும் ஜிம் உடையுடன் வெளியேறும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. தனது காதலியுடன் சுஷாந்த் எடுத்துக்கொண்ட கடைசி புகைப்படமும் இதுதான் என கூறப்படுகிறது.

அதேநேரம் சுஷாந்த் சிங்குடனான காதல் குறித்து Rhea Chakraborty பேசியபோது, நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே, எங்களுக்குள் காதல் எதுவும் கிடையாது என கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சுஷாந்தின் நெருங்கிய உறவினர் ஒருவர் கூறுகையில், பெண்ணின் பெயரை குறிப்பிடாமல், சுஷாந்திற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும், வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாகவும், இதற்காக அனைவரும் விரைவில் மும்பைக்குச் செல்லவும் திட்டமிட்டிருப்பதாக கூறியிருந்தார்.


Advertisement