சினிமா

குடும்பத்துடன் ஜாலி ட்ரிப் சென்றுள்ள நடிகர் சூர்யா! மகள் செய்த அசத்தல் காரியம்! வைரல் வீடியோ!!

Summary:

குடும்பத்துடன் ஜாலி ட்ரிப் சென்றுள்ள நடிகர் சூர்யா! மகள் செய்த அசத்தல் காரியம்! வைரல் வீடியோ!!

தமிழ் சினிமாவில் ஏராளமான பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் இயக்குனர் பாலாவுடன் கூட்டணியில் இணைந்து தனது 41-வது படத்தில் நடிக்கிறார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகர் சூர்யா கடந்த 2006 ஆம் ஆண்டு
முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும் அழகிய நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர். மேலும் இடையில் சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகியிருந்த நடிகை ஜோதிகா தற்போது கதைக்கு, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். இவர்களுக்கு தியா, தேவ் என இருபிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது சூர்யா மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஜாலியாக வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். மேலும் அங்கு பல சாகச பயணம் மற்றும் விளையாட்டினையும் மேற்கொண்டுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தியா எடிட் செய்துள்ளார். அந்த வீடியோவை ஜோதிகா பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.


Advertisement