surya-vijaydevarakonda-joins-surya
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தன நடிப்பில் அனைவரையும் கவர கூடியவர். மிகவும் வித்தியாசமாக நடிக்க கூடிய திறமை வாய்ந்த நடிகர். நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே (NGK) எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் திரைக்கு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் தான் திரைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த இரண்டு படங்களை தொடர்ந்து இறுதிச்சுற்று இயக்குனரான சுதா கோங்காரா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளார். மேலும் விஜய் தேவரகொண்டா தற்போது தமிழ் தெலுங்கில் தயாராகும் நோட்டா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழிலும் திரைக்கு வர இருக்கிறது.
இவர்கள் இருவருமே வித்தியாசமாக நட்டிக்ககூடிய திறமை வாய்ந்த நடிகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்புகள் உண்டாகி இருக்கிறது. இந்நிலையில் இவ்ரகள் இருவரும் தற்போது புக் செய்துள்ள படங்கள் முடிவடைந்த நிலையில் இந்த படத்தினை பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement