தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
மிரட்டும் சூர்யாவின் 'கங்குவா' படத்தின் டீஸர்.. வைரலாகும் வீடியோ!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். என்ன திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்தத் திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்தியா முழுவதும் சுமார் 10 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
Here’s the phenomenon 🗡️#Kanguva Sizzle Tease is here
— Studio Green (@StudioGreen2) March 19, 2024
🔗 https://t.co/xzKL6qatAr#KanguvaSizzle 🦅 @Suriya_offl @DishPatani @thedeol @directorsiva @ThisIsDSP #StudioGreen @GnanavelrajaKe @UV_Creations @KvnProductions @PenMovies @jayantilalgada @NehaGnanavel @Dhananjayang… pic.twitter.com/1rvobPlUSk
இந்த நிலையில் தற்போது சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் டீஸர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.