சூர்யாவின் கங்குவா படத்தின் டீஸர் வீடியோ எப்போது ரிலீஸ்? வெளியான தகவல்!Surya in kanguva movie teaser update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். என்ன திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

Kanguva

இந்தத் திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்தியா முழுவதும் சுமார் 10 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வரும் கோடை விடுமுறையில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சமீபத்தில் கங்குவா படத்தில் தன்னுடையக் காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி முடித்தார் சூர்யா. இதையடுத்து விஎஃப்எக்ஸ் மற்றும் மற்ற மொழிகளுக்கான டப்பிங் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது 

Kanguva

ஏற்கனவே, இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியான நிலையில் தற்போது டீசர் வீடியோ தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, ஏப்ரல் மாத இறுதியில் இந்த படத்தின் டீசர் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.