2 பாகங்களா வெளியாகும் சூர்யாவின் கங்குவா திரைப்படம்.. இயக்குனர் கொடுத்த அப்டேட்!

2 பாகங்களா வெளியாகும் சூர்யாவின் கங்குவா திரைப்படம்.. இயக்குனர் கொடுத்த அப்டேட்!



Surya in kanguva movie 2 part

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். என்ன திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்தத் திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்தியா முழுவதும் சுமார் 10 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார்.

Kanguva

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வரும் கோடை விடுமுறையில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சமீபத்தில் கங்குவா படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் சூர்யா முடித்துள்ளாதாக அறிவித்திருந்தார். இதனையடுத்து விஎஃப்எக்ஸ் மற்றும் மற்ற மொழிகளுக்கான டப்பிங் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Kanguva

இந்த நிலையில் கங்குவா படத்தின் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்துக்கான முன்னோட்டம் இடம்பெறுவது போல சில காட்சிகளை இணைக்க இயக்குனர் சிவா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தற்போது இப்போது மேலும் சில நாட்கள் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.