ஜெயிச்சுட்டோம் மாறா.! நடிகர் சூர்யாவிற்கு கிடைத்த மாபெரும் பெருமை! கொண்டாடும் ரசிகர்கள்!!

ஜெயிச்சுட்டோம் மாறா.! நடிகர் சூர்யாவிற்கு கிடைத்த மாபெரும் பெருமை! கொண்டாடும் ரசிகர்கள்!!


Surya got best actor national award

இந்திய சினிமாதுறையில் பெருமை மிக்க விருதுகளில் ஒன்றாக திகழ்வது தேசிய திரைப்பட விருதுகள். சிறந்த நடிகர்கள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அந்த விருது வழங்கப்படும். இந்நிலையில்  2020-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழில் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சூரரை போற்று. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தியே இந்த படம் உருவானது.

surya

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். 
கொரோனா காரணமாக ஓடிடியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் இந்தப் படத்தில் தனது சிறந்த நடிப்பை வழங்கிய சூர்யாவுக்கு தற்போது சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  அதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.