மகாபாரத கதையில் களமிறங்கும் சூர்யா... பாலிவுட்ல இருந்து வெளியான அட்டகாசமான அப்டேட்.!
மகாபாரத கதையில் களமிறங்கும் சூர்யா... பாலிவுட்ல இருந்து வெளியான அட்டகாசமான அப்டேட்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தத் திரைப்படம் வரலாற்று பின்னணி கொண்ட கதையாக உருவாகி வருகிறது.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவதற்கு முன்னரே சூர்யா பல திரைப்படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். தமிழ் சினிமாவின் பிசியான ஹீரோவாக இருந்து வருகிறார். சூர்யா சசூரரை போற்றி திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் வெற்றி மாறனின் வாடிவாசல். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரோலக்ஸ் மற்றும் இரும்பு கை மாயாவி என வரிசையாக அவரது கையில் படங்கள் இருக்கிறது.
இந்நிலையில் பாலிவுட் திரைப்படம் ஒன்றில் இதிகாச கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மகாபாரதக் கதையின் கர்ணன் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். மேலும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திரைப்படத்தை பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்க இருக்கிறார். ஹிந்தி, தமிழ் மற்றும் பல முக்கிய இந்திய மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கு கர்ணா என பெயரிட இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.