திடிரென்று கதறி அழுத சூர்யா.. பரிதவித்துபோன குடும்பத்தினர்.?
திடிரென்று கதறி அழுத சூர்யா.. பரிதவித்துபோன குடும்பத்தினர்.?

அமெரிக்காவில் உள்ள அமைதியான நகரங்களில் ஒன்றான டல்லாஸ் நகரில் கடை வீதியில் இந்த மாதம் கடந்த ஆறாம் தேதி சனிக்கிழமை மதியம் 3.30 மணியளவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் சோகத்தை டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் கொலையாளி உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் கடந்த ஐந்து மாதங்களில் அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதில் அமெரிக்காவில் பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஐஸ்வர்யா என்பவரும் பலியாகி உள்ளார். இவர் ஆந்திராவில் உள்ள ஒரு மாவட்ட நீதிபதியின் மகள். மேலும் ஐஸ்வர்யா, சூர்யாவின் தீவிர ரசிகர் ஆவார்.
இதனையறிந்த நடிகர் சூர்யா கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது படத்தை அவரது வீட்டிலேயே வைத்து மலர் மாலை மரியாதை செய்தார். ஐஸ்வர்யாவின் குடும்பத்தை நேரடியாக தொடர்பு கொண்ட சூர்யா தனது இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார். தற்போது இச்செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.