ப்ளீஸ்.. குழந்தைங்க வேணாம்! நடிகர் சூர்யா விடுத்த வேண்டுகோள்! எங்கு தெரியுமா? வைரலாகும் வீடியோ!!



surya-and-jothika-went-to-mumbai-photos-viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ என்ற படத்தில் நடிக்கிறார். 

மேலும் அடுத்ததாக பல முன்னணி இயக்குனர்களின் படங்கள் கைவசம் உள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு வேலையாக அவர் தனது மனைவி ஜோதிகாவுடன் மும்பை சென்றுள்ளார். மேலும் தங்களது பிள்ளைகளையும் உடன் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் நக்மா உள்ளிட்ட குடும்பத்தினரோடு அங்குள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளனர்.

அங்கிருந்து வெளியேறும் போது அவர்களை மும்பை போட்டோகிராஃபர்ஸ் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த நிலையில் குழந்தைகளின் பிரைவசியை மதிக்கும்படி கேட்டுக்கொண்டு சூர்யாவும், ஜோதிகாவும் மட்டும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.