சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யார் தெரியுமா - செம்ம மாஸ் கூட்டணி

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யார் தெரியுமா - செம்ம மாஸ் கூட்டணி


Suriya bala

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரின் நடிப்பில் வெளியான என்ஜிகே படம் தோல்வியை தழுவியதை அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் அந்த படமும் வெற்றியை தரவில்லை. இந்நிலையில் வெற்றியை தர வேண்டும் என்ற நோக்குடன் கடுமையாக உழைத்து வருகிறார். தற்போது சூரரைப் போற்றும் என்ற படத்தில் நடித்து முடிந்துள்ளார்.

Suriya

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளார். இந்நிலையில் தற்போது வந்த புதிய தகவல் படி சூர்யா அடுத்ததாக இயக்குனர் இமயம் பாலாவின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்பு இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான நந்தா, பிதாமகன் போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்ததை அடுத்து இந்த படமும் ஒரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.