நிஷா குறித்து பிக்பாஸ் சுரேஷ் கூறிய ஒத்தவார்த்தை! என்னப்பா இவ்வளவு மோசமாக சொல்லிட்டாரே.. ஷாக்கான ரசிகர்கள்!

நிஷா குறித்து பிக்பாஸ் சுரேஷ் கூறிய ஒத்தவார்த்தை! என்னப்பா இவ்வளவு மோசமாக சொல்லிட்டாரே.. ஷாக்கான ரசிகர்கள்!


suresh-tweet-about-nisha

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்க 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் 50 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டுள்ளது. போட்டியின் இரண்டாவது வாரம் நடிகை ரேகா பின் பாடகர் வேல்முருகன் அவரை தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும்  பாடகி சுசித்ரா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்று சம்யுக்தா எலிமினேட் ஆனார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லாமல் வம்பிழுத்து கொண்டு இருந்தவர் சுரேஷ் சக்கரவர்த்தி.இவரால்தான் பிக்பாஸ் வீட்டில் சண்டையே வருகிறது என்பது போலவும் கருத்துக்கள் பரவிவந்தது. ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனா வைல்ட் கார்டு எண்ட்ரியாக  நுழைந்த பிறகு அவரது ஆட்டம் குறைந்தது. 

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி நிஷா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒற்றை வரியில், 'நிஷா.. வேஷம்' என்று பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் சிலர் அதற்கு ஆதரவாக வெளியே கலகலப்பாக நாங்கள் கண்ட நிஷா அங்கு இல்லை என்பது போல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சுரேஷ் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது, போட்டியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து நிஷா சமைத்த சமையல் மட்டுமே சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் இவ்வாறு பதிவிட்டுள்ளது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது