பிக்பாஸ் வீட்டிலிருந்து திடீரென வெளியேறிய போட்டியாளர்! இதுதான் காரணமா?? செம ஷாக்கில் ரசிகர்கள்!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து திடீரென வெளியேறிய போட்டியாளர்! இதுதான் காரணமா?? செம ஷாக்கில் ரசிகர்கள்!!


suresh-chakaravarthy-releave-from-bigboss-ultimate-news

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 5வது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடங்கி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இதில் ஆரம்பத்தில் 14 போட்டியாளர்களில் ஒருவராக சுரேஷ் சக்ரவர்த்தி கலந்து கொண்டார். பின்னர் ஒருசில வாரத்திலேயே அவர் எலிமினேட் ஆனார். அதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

bigboss

இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல் ஒரு சில காரணங்களால் நிகழ்ச்சியிலிருந்து விலகிய நிலையில் சிம்பு தற்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்த நிலையில் வனிதா அவராகவே பிக்பாஸ் விட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தி தானாக வெளியேறி உள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும் உடல்நலக் குறைவால் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.