சினிமா

சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் சுரேஷ் தாத்தா!! அதுவும் எந்த சூப்பர்ஹிட் இயக்குனரின் படத்தில் பார்த்தீர்களா!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 4

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சுரேஷ் சக்கரவர்த்தி. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவரை அனைவரும் சுரேஷ் தாத்தா என்றே அழைக்க துவங்கியுள்ளனர். இவரும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஆவார் இவர் வாக்குமூலம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கி அதனைத் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி சின்னத்திரை இயக்குனராக மற்றும் நடிகராகவும் சுரேஷ் சக்கரவர்த்தி பணியாற்றியுள்ளார். பின்னர் வெளிநாட்டில் ஹோட்டல் தொழில் செய்து வந்த அவர் அண்மையில் மீண்டும் சென்னையில் வந்து செட்டிலாகிவிட்டார். இவ்வாறு பன்முகத்திறமை திறமை கொண்டு விளங்கிய சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டில் சுறுசுறுப்பாகவும்,இளம் போட்டியாளர்களுக்கு இணையாக ஈடுகொடுத்தும் தனது டாஸ்க்குகளை சிறப்பாக செய்து வந்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமே இவர் மக்கள் மத்தியிலும் பெருமளவில் பிரபலமானார் எனலாம் .

இந்த நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி தற்போது அங்காடி தெரு,அரவான், காவியத் தலைவன் போன்ற படங்களை இயக்கி தேசிய விருது பெற்ற வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இப்படத்தில் கைதி மற்றும் மாஸ்டர் படத்தின் மூலம் புகழடைந்த அர்ஜுன் தாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல்நாள் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட சுரேஷ் சக்கரவர்த்தி இதுகுறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 


Advertisement