ஜெயிலர் சக்சஸ் மீட்... கிங்ஸ்லி மற்றும் ஜாபருக்கு சூப்பர் ஸ்டார் வழங்கிய பரிசு... வைரலான புகைப்படம்.!

ஜெயிலர் சக்சஸ் மீட்... கிங்ஸ்லி மற்றும் ஜாபருக்கு சூப்பர் ஸ்டார் வழங்கிய பரிசு... வைரலான புகைப்படம்.!


supr-star-gives-a-surprise-gift-to-kingsley-and-jaffer

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ்குமார், யோகி பாபு, விநாயகன், ரெடின் கிங்ஸ்லீ மற்றும் ஜாபர் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான திரைப்படம் ஜெயிலர்.

கடந்த மாதம் பத்தாம் தேதி வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் இந்த திரைப்படம் 675 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அண்ணாத்த மற்றும் தர்பார் திரைப்படங்களின் தோல்வியை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது, சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது.

Kollywoodஇந்தத் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு கார் மற்றும் காசோலைகளை அன்பளிப்பாக வழங்கியிருந்தார் தயாரிப்பாளர் கலாநிதிமாறன்.

மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக படத்தின் சக்சஸ் மீட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடினர். இதில் கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் நகைச்சுவை நடிகர்களான ரெட்டின் கிங்ஸ்லீ மற்றும் ஜாஃபர் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு தனது அன்பை பரிமாறினார். அவர்கள் இருவருக்கும் இந்த கேண்டிடான புகைப்படத்தின் மூலம் அன்பு பரிசை வழங்கினார் சூப்பர் ஸ்டார்.