ரஜினி தொடங்கும் புது டீவியின் பெயர் இதுதானாம்! அடடே இது கூட நல்லா இருக்கே!

ரஜினி தொடங்கும் புது டீவியின் பெயர் இதுதானாம்! அடடே இது கூட நல்லா இருக்கே!


Super star rajinis new tv channel name leaked

ரஜினிகாந்த் புதிய டி.வி சேனல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் அவருடைய ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் அவரை பல ஆண்டுகளாகவே அரசியலுக்கு வருமாறு அழைத்தனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை எந்த மூடி முடிவையும் சொல்லாத ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் இந்த மாதத்துடன் ஒரு ஆண்டுகள் முடிவடையும் நிலையில் தற்போது புதிய டிவி சேனலை துவங்க முடிவெடுத்துள்ளார்.

மேலும் தனது பெயரில் டிவி சேனல் தொடங்க தனக்கு எந்த நிபந்தனையும் இல்லை என்றும், ரஜினி பெயரில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த ட்ரேட் மார்க், புகைப்படம், லோகோ போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ளவும் ரஜினி ஒப்புதல் அளித்துள்ளார்.

அந்த லிஸ்டில் பின்வரும் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ன. தலைவர் டிவி, ரஜினி டிவி, சூப்பர் ஸ்டார் டிவி. எனவே இந்த மூன்று பெயர்களில் ஏதாவது ஓன்று ரஜினியின் புது டிவி பெயராக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Rajini new tv