"எனது நெருங்கிய நண்பரை இழந்து விட்டேன்" சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வைரலாகும் ட்விட்டர் பதிவு..

"எனது நெருங்கிய நண்பரை இழந்து விட்டேன்" சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வைரலாகும் ட்விட்டர் பதிவு..


super-star-rajini-kandh-twitter-post

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் சரத்பாபு. தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து மக்கள் மனதை கவர்ந்துள்ளார்.

rajini

சரத்பாபு 'நிழல் நிஜமாகிறது' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன் பிறகு வட்டத்துக்குள் சதுரம், உயிருள்ளவரை, முள்ளும் மலரும், முடி சூடா மன்னன், நூல்வெளி, நினைத்தாலே இனிக்கும் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழில் வெற்றி திரைப்படங்களை ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.

rajini

இது போன்ற நிலையில் சமீபத்தில் இவர் இறந்து விட்டதாக செய்தி சமூகவலைத்தளங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது வதந்தி என அவரது குடும்பத்தினர் தெரிவித்த நிலையில், நேற்று திடீரென உண்மையாகவே சரத்பாவை இறந்து விட்டார் என்று அவரது குடும்பத்தினர் தரப்பில் இருந்து செய்தி வெளியானது. சரத்பாபுவின் மரணத்திற்கு ரஜினி இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இப்பதிவு தற்போது வைரலாகி வருகிறது.