தலைவர் 169: சன் டிவி ஸ்டூடியோவில் மாஸாக நடந்த போட்டோஷூட்.. ரசிகர்களுக்கு உற்சாக செய்தி..!!

தலைவர் 169: சன் டிவி ஸ்டூடியோவில் மாஸாக நடந்த போட்டோஷூட்.. ரசிகர்களுக்கு உற்சாக செய்தி..!!


super star new movie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் தனது 169-வது படத்தின் தயாரிப்பு பணிகளை கவனித்திருந்தார். இதனைத்தொடர்ந்து  கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த நிலையில் இப்படத்தை எந்திரன், பேட்டை, அண்ணாத்த படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவித்தது. இந்த படத்தின் டைட்டில் லுக் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியானது. இப்படத்திற்கு "ஜெயிலர்" என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 10ஆம் தேதியிலிருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

cinema

இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள சன் டிவி ஸ்டூடியோவில் நடைபெற்றுள்ளது. அதில் ரஜினிகாந்த் மற்றும் சில நடிகர்கள் கலந்து கொண்ட நிலையில், கதாபாத்திரங்கள் தங்களுடன் வெட்டும் கத்தி போன்றவற்றுடன் போஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் போட்டோ சூட்டில் எடுத்த புகைப்படங்கள் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.