அடஅட.. ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் சூப்பர் சிங்கர் பிரியங்கா! புடவையில் வேற லெவலில் இருக்காரே!!

அடஅட.. ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் சூப்பர் சிங்கர் பிரியங்கா! புடவையில் வேற லெவலில் இருக்காரே!!


Super singer priyanga photoshoot viral

விஜய் தொலைக்காட்சியில் மக்களின் திறமையை ஊக்குவித்து அவர்களை முன்னேற்றும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து பெருமளவில் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது மெல்லிய இசையால், காந்த குரலால் அனைவரையும் கவர்ந்தவர் பிரியங்கா. இவரடது பாடல்களுக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

பிரியங்கா தற்போது திரைப்படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார். மேலும் இவர் தனது மெல்லிய குரலில் பாடிய சின்ன சின்ன வண்ணக்குயில் பாடல் ரசிகர்கள் மெய்சிலிர்க்க வைத்து பெரும் வரவேற்பை பெற்றது. இவர் சிறந்த பாடகியாக மட்டுமின்றி பல் மருத்துவராகவும் உள்ளார்.

இதற்கிடையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கியூட்டான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவர் தற்போது ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் புடவையில் செம்ம அழகாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.