சிறகடிக்க ஆசை மீனாவா இது! மேக்அப்பில் மின்சாரம் போன்று மின்னும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்....
சன்டிவியில் இன்று நடந்த 6 அதிரடி மாற்றங்கள்!! பயங்கர குழப்பத்தில் ரசிகர்கள்!!

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமானது சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சன் டீவியின் இந்த வளர்ச்சிக்கும் புகழுக்கும் முக்கிய காரணமாக இருப்பது அதில் வரும் சீரியல்கள்தான்.
முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே அதிகம் சீரியல் பார்த்து வந்தனர். ஆனால், இளைஞர்கள், இளம்பெண்கள் என அனைவரும் தற்போது சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர். சில நேரங்களில் சிரியலில் வரும் நாயகிகளுக்காகவே அதிகம் சீரியல் பார்ப்பவர்களும் உண்டு.
இந்த நிலையில், சன்டிவியில் இன்று அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளன. இன்று(மார்ச் 18) முதல் புத்தம்புதிய நிலா எனும் மெகா தொடர் ஒளிபரப்பாக உள்ளது. "நிலா" தொடர் இன்று முதல் மதியம் 2:30 மணிக்கு வாரம்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகவுள்ளது.
இதற்குமுன் மதியம் 2:30 மணிக்கு கல்யாணபரிசு எனும் மெகா தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இன்றுமுதல் கல்யாணபரிசு தொடர் மாலை 3:00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய தொடர் நிலாவை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இதுவரை 3:00 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ரோஜா தொடர் பிரமாண்டமாக மக்கள் மனதில் இடம்பிடித்து வந்தது. மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ரோஜா என்ற சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் அந்த நிகழ்ச்சியை ப்ரைம் டைமான இரவு 9 மணிக்கு மாற்றியுள்ளது சன் டிவி.
அதேபோல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த லக்ஷ்மி ஸ்டோர் எனும் தொடர் இரவு 9:30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சந்திரகுமாரி தொடர் மாலை 6:30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுவரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த விநாயகர் சீரியல் கடந்த வாரம் சனிக்கிழமையுடன் நிறைவுற்றுள்ளது.