தமிழகம் சினிமா

விசுவாசத்திற்கு போட்டியாக சர்க்கார் படக்குழுவின் புதிய அறிவிப்பு; ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்த புதிய யுக்தி

Summary:

ரஜினி, கமலுக்கு பிறகு தமிழ் திரையுலகை கடந்த சில ஆண்டுகளாக ஆட்சி செய்பவர்கள் அஜித் மற்றும் விஜய் தான். அவர்களை விட அவர்களது ரசிகர்களுக்கு இடையே தான் பல போட்டிகள் நிகழ்ந்து வருகிறது.

இதிலும் இவர்கள் இருவரது படங்கள் ஒரே நேரத்தில் உருவாகி வந்தால் ரசிகர்கள் மேலும் உற்சாகத்தில் இருப்பார்கள். சமூக வலைத்தளங்களில் இவர்கள் செய்யும் சேட்டைகள் அதிகமாகவே இருக்கும்.

தற்பொழுது உருவாகி வரும் விஜயின் சர்க்கார், அஜித்தின் விசுவாசம் படங்களை பற்றி ரசிகர்கள் மாறி மாறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் வெளியான  விசுவாசம் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. 

visuvaasam first look க்கான பட முடிவு

இந்நிலையில் விஜய் ரசிகர்களையும் உற்சாகபடுத்த சர்க்கார் படக்குழு புதிய வெளியீட்டை அறிவித்துள்ளது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தளபதி விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சர்கார்’ படத்தின்  படபிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ளது.

படத்தின் பாடல்கள் பிரமாண்டமாக அக்டோபர் 2 அன்று ரிலீசாக உள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. 

படத்தின் இசை வெளியீட்டு தேதியை அறிவித்ததோடு மீண்டும் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் நாளை முதல் தொடர்ந்து ஐந்து நாள் வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.
 


Advertisement