சுந்தரா டிராவல்ஸ் பட நடிகையின் கண்கலங்கிய பேட்டி.. என்ன காரணம் தெரியுமா.?

கடந்த 2002ஆம் ஆண்டு மறைந்த நடிகர் முரளி மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான முழுநீள நகைச்சுவைத் திரைப்படம் தான் 'சுந்தரா டிராவல்ஸ்'. படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராதா.
முதல் படமே ராதாவிற்கு பெரியளவு பேசப்படும் படமாக அமைந்தது. மேலும் அவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து கார்த்திக், சத்யராஜ், கரண் ஆகியோருடன் தொடர்ந்து ராதா நடித்தார்.
15 வருடங்களுக்குப் பிறகு தான் ராதாவிற்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனிடையில் பாரதி கண்ணம்மா2 சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில் அவரளித்த பேட்டியில், "வடிவேலு சார் மிகவும் அன்பானவர்.
சினிமாவில் சுகன்யா, ரேவதி ஆகியோர் போல் வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் நம் வாழ்க்கையில் நாம் நடக்க கூடாது என்று எதை நினைக்கிறோமோ அது தான் நமக்கு நடக்கும். நல்ல வேலை செய்து நிறைய சம்பாதிக்கணும்" என்று ராதா கூறினார்.