பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய இயக்குனர் சுந்தர் சி.. மனைவி, குழந்தைகளுடன் சாமி தரிசனம்.!



Sundar C Visit Palani Murugan Temple 


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் வலம் வருபவர் சுந்தர் சி. இவரின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான பல படங்கள், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்றுள்ளன. 

சமீபத்தில் பேய் கதைகளை கையில் எடுத்த சுந்தர் சி, அரண்மனை படத்தின் 4 பாகங்களை இயக்கி வழங்கி இருக்கிறார். கலகலப்பு திரைப்படத்தின் இரண்டு பாகத்தை இயக்கி வழங்கியுள்ளார். தற்போது, நயன்தாராவின் நடிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குகிறார். 

இதையும் படிங்க: பண்ணைபுரம் டூ லண்டன் சிம்பொனி.. இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு..

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு வந்த நடிகர் சுந்தர் சி, மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். 

தனது மனைவி குஷ்பூ, மகள்களுடன் பழனி முருகனை தரிசனம் செய்தவர், கோவிலுக்கு வந்த ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். சுந்தர் சி - குஷ்பூ தம்பதிகள் திருமணம் செய்து 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதனை கொண்டாடும்பொருட்டு தம்பதிகள், குழந்தைகளுடன் பழனிக்கு வருகை தந்தனர்.

இதையும் படிங்க: கானா இசைவாணிக்கு தொல்லை கொடுத்த விவகாரம்; 3 பேர் அதிரடி கைது.!