கானா இசைவாணிக்கு தொல்லை கொடுத்த விவகாரம்; 3 பேர் அதிரடி கைது.!



Gana Isaivani Appeal 2 BJP Supporters Arrested

 

கடந்த 2017ம் ஆண்டு கானா பாடகி இசைவாணி, "ஐ ஆம் சாரி ஐயப்பா" என்ற பாடல் ஒன்றை பாடி இருந்தார். இந்த வீடியோ சில மாதங்களுக்கு முன்பு, திடீரென மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, கானா பாடகி ஐயப்பனை அவமதிப்பு செய்ததாக வைரலாக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சிலர், கானா பாடகி இசைவாணியின் செல்போன் நம்பரை தெரிந்துகொண்டு, ஆரை பாலின ரீதியாகவும், ஜாதியைச் சொல்லியும் அவதூறு பேசி மிரட்டல் விடுத்தனர். இந்த விஷயம் தொடர்பாக இசைவாணி சைபர் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். 

இதையும் படிங்க: திரைப்பட பாடகியின் பேரில் ஆன்லைன் கேம் மோசடி; மக்களே நம்பாதீங்க.. உஷார்.!

Gana Isaivani

புகாரை ஏற்ற காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை, எஸ்சி., எஸ்டி வன்கொடுமை உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பாடகி இசைவாணிக்கு மிரட்டல் விடுத்ததாக பாஜக முன்னாள் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த முன்னாள் பாஜக நிர்வாகி ரவிச்சந்திரன் (வயது 44), பொழிச்சலூரைச் சேர்ந்த சதிஷ் குமார் (வயது 64), சேலத்தைச் சேர்ந்த அழகு பிரகஸ்பதி (வயது 24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

இதையும் படிங்க: #Breaking: நடிகர் சிவாஜி கணேசனின் வீடு ஜப்தி செய்ய நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.!