சினிமா

என்னது யோகிபாபுவிற்கு ஜோடியாக இந்த நடிகையா? வெளியான தகவலால் செம ஷாக்கில் ரசிகர்கள்!!

Summary:

sunanina act with yogibabu

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களில் தற்போது அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளவர் யோகி பாபு. அஜித், விஜய் என் முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் யோகி பாபு சிறிய பட்ஜெட் படங்களிலும், எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்து வருகிறார்.

யோகி பாபுவிற்கு தற்போது நிறைய படங்கள் கை வசம் உள்ளன. பிரபல ஹீரோக்களுடன் காமெடி நடிகராகவும், பிரபல நடிகைகளை காதலிக்கும் மன்மதனாகவும், குழந்தைகளுக்கு பிடித்தமான நகைச்சுவை வேடங்களையும் ஏற்று தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளவர் யோகி பாபு.

yogibabu க்கான பட முடிவு

மேலும் அவர் கூர்க்கா, தர்மபிரபு போன்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து யோகிபாபுவும், கருணாகரணும் இணைந்து காமெடி கலந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன், திரில்லர் படத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு ட்ரிப் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும்  இப்படத்தை டார்லிங், 100 படத்தின் இயக்குனர் சாம் ஆண்டனின் உதவி இயக்குனர் டென்னிஸ் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் ஹீரோயினாக சுனைனா நடிக்கஉள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement