சினிமா வீடியோ

ப்ளீஸ் உதவுங்கள்! ரொம்ப அவசரம்.. முதன்முறையாக நடிகை சுனைனா வெளியிட்ட உருக்கமான வேண்டுகோள்!

Summary:

தமிழ் சினிமாவில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற

தமிழ் சினிமாவில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் இவரது நடிப்பில் உருவான ட்ரிப் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் நடிகை சுனைனா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர், நான் இதுவரைக்கும் இப்படி சமூக வலைத்தளபக்கங்களில் பேசியதில்லை. ஆனால் தற்போது ரொம்ப முக்கியமான விஷயம் என்பதால் இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.  அவினாஷ் என்பவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றார். தற்போது அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி தேவைப்படுகிறது.

இது மிகவும் அவசரம். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பத்து ரூபாயாக இருந்தாலும், மிக சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை அதனை கொடுத்து உதவுங்கள். மேலும் இந்த விவரத்தை அனைவருக்கும் பகிருங்கள். இது அனைவருக்கும் சென்றடைய வேண்டும். நான் தற்போதுதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளேன். கொரோனோ வைரஸ் கொடூரமானது. தயவுசெய்து உதவுங்கள் என கூறியுள்ளார்.


Advertisement