சினிமா

1 இல்லை 2 இல்லை.. நச்சுனு நாலு படம்.. சன் டிவி ஒளிபரப்பும் பொங்கல் தின சிறப்பு திரைப்படங்களின் பட்டியல் இதோ..

Summary:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளைமுதல் நான்கு புதுப்படங்களை ஒளிபரப்புகிறது சன் தொலைக்காட்சி.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளைமுதல் நான்கு புதுப்படங்களை ஒளிபரப்புகிறது சன் தொலைக்காட்சி.

தீபாவளி, பொங்கல் என்றாலே திரையரங்குகளில் புதுப்படங்கள் வெளியாவதும், தொலைக்காட்சிகளில் புதுப்படங்கள் ஒளிபரப்பாவதும் வழக்கமான ஒன்றுதான். அந்தவகையில் இந்த வருடம் பொங்கல் பாண்டியகை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி பட்டையை கிளப்பிவருகிறது.

அதேபோல் தனியார் தொலைக்காட்சிகளும் தங்கள் பங்கிற்கு புது படங்களை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒளிபரப்ப தயாராகியுள்ளது. அந்தவகையில் புது படங்களை ஒளிபரப்புவதில் பெயர் போன சன் தொலைக்காட்சி இந்தவருட பொங்கலுக்கும் சூர்யா, அஜித் என மாஸ் ஹீரோக்கோளின் படங்களை ஒளிபரப்பி டிஆர்பியை எகிறவைக்க தயாராக உள்ளது.

இந்நிலையில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற சூரரைப்போற்று திரைப்படம் நாளை மாலை 6.30 மணிக்கும், விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் தயாரான புலிக்குட்டி பாண்டி திரைப்படம் திரைக்கே வராமல் நேரடியாக சன் தொலைக்காட்சி மூலம்  வரும் வெள்ளி அன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

அதேபோல் வரும் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு காஞ்சனா 3 திரைப்படமும், வரும் ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு தல அஜித் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மாபெரு வெற்றிபெற்ற விஸ்வாசம் படமும் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement