என்னது.. இவரா?? இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் தெரியுமா?? ஷாக்கில் ரசிகர்கள்!

என்னது.. இவரா?? இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் தெரியுமா?? ஷாக்கில் ரசிகர்கள்!


suja-varuni-may-eleminate-in-this-week

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி அண்மையில் தொடங்கபட்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டு இருக்கிறது. நடிகர் கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சி ஆரம்பமான தினத்திலிருந்தே வித்தியாசமான டாஸ்க்குகளால் போட்டியாளர்களிடையே மோதல் ஏற்பட்டு வீடே ரணகளமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறினார்.

bigboss

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சுஜா வருணி வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது நாமினேட் செய்யப்பட்ட நிலையில் சுஜாவே குறைந்த வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும், அவரே பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் யார் உறுதியாக வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.