சினிமா

ஏன்மா குழந்தைக்கு கண்ணு பட்டுடுமோ! சுஜா வருணி தன் குழந்தைக்கு என்ன செய்துள்ளார் என்று பாருங்கள்!

Summary:

Suja varuni latest photo

தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதல் நடித்து வந்தவர் நடிகை சுஜா வருணி. இவர் இதுவரை 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வாடீல் போன்ற படங்கள் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. 

ஆனால் இவர் பல திரைப்படங்களில் ஒரு சில பாடல்களுக்கு மட்டும் நடனம் ஆடியுள்ளார் சுஜா. வாத்தியார் திரைப்படத்தில் இவர் ஆடிய என்னடி முனியம்மா பாடல் இன்றுவரை மிகவும் பிரபலமாக உள்ளது.இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து மக்களிடம் இன்னும் பிரபலமானார். 

அதன் பிறகு பிக்பாஸ் வீட்டை வெளியேறிய பிறகு கடந்த ஆண்டு சிவாஜி கணேசன் பேரனான சிவக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இந்த ஆண்டு ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் தற்போது அவர் தனது குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

அதில் குழந்தையின் முகத்தை மட்டும் காட்டாமல் மறைத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏன்மா குழந்தைக்கு கண் பட்டு விடுமோ என கிண்டல் செய்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


Advertisement