முதன்முதலாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சுஜா.! செம உற்சாகத்துடன் என்ன கூறியுள்ளார் தெரியுமா?
14 வயதில் சினிமாத்துறையில் நுழைந்து இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருப்பவர் சுஜா வருணி . நாயகியாக அறிமுகமானாலும், சினிமாவில் ஒற்றை பாடலுக்கு தான் இவர் அதிகமாக நடனமாடி இருக்கிறார்.இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து சுஜா வருணியும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகன் ராம்குமாரின் மகன் சிவகுமாரும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில் கடந்த ஆண்டு இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சுஜா கர்ப்பமாக இருந்த நிலையில், சமீபத்தில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனை சுஜாதாவின் கணவர் மிகவும் உற்சாகத்தோடு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது சுஜா தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் கையில் குழந்தை உள்ள புகைப்படத்தை வெளியிட்டு, அவருக்கு மனதார நன்றியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர். கனிமொழிக்கு எனது மனமார்ந்த நன்றி. எனது வாழ்வில் நான் பார்த்ததிலேயே சிறந்த டாக்டர் இவர்தான். இவர் என்னை ஒரு தாயைப் போல கவனித்துக்கொண்டார். அவரது கையில் எனது குழந்தை முதன் முதலாக இந்த உலகிற்கு வந்ததற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
MySincere Txs to Dr.Kanimozhi,I am truly Blessed to be guided by her therapy.She is the Best Dr,I have ever met in my life.Besides being a Dr,she has taken an utmost care as mother,being with me always.I am truly Blessed to have myChild been brought to see theworld,by her hands🙏 pic.twitter.com/fCidMNAmYB
— SujaVaruneeShivakumar (@sujavarunee) August 23, 2019