சினிமா

சன் டிவி-யின் ஹிட் சீரியலில் இணைந்த பிரபல பிக்பாஸ் சீசன் 1 பிரபலம்..!! யார் தெரியுமா??

Summary:

சன் டிவி-யின் ஹிட் சீரியலில் இணைந்த பிரபல பிக்பாஸ் சீசன் 1 பிரபலம்..!! யார் தெரியுமா??

சன் டிவி சீரியலில் கெஸ்ட் ரோலில் களமிறங்கியுள்ளார் நடிகை சுஜா வருநீ.

தமிழ் சினிமாவில் பல படங்களில் குத்து பாடல்களுக்கு நடனமாடியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சுஜா வருநீ. சினிமாவில் பிரபலமாக இருந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இவர், மறைந்த நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் பேரன் சிவாஜி தேவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காவிட்டாலும், எப்போதும் இன்ஸ்டா, யூடியூப் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்கள் மூலம் ரசிகர்களை சந்தித்து வந்தார் சுஜா.

இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் அன்பே வா சீரியலில் கெஸ்ட் ரோலில் களமிறங்கியுள்ளார் சுஜா. சன் டிவியில் தினமும் இரவு 9 . 30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் அன்பே வா சீரியலில் பூமிகா கேரக்டரில் நடிகை டெல்னா டேவிஸ் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கர்நாடகாவை சேர்ந்த விராட், வருண் என்ற கேரக்டரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் நடிகை சுஜா வருநீ இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.


Advertisement