சினிமா

இந்த பிரபல நடிகரும், பாடகர் எஸ்.பி.பிக்கும் இப்படி ஒரு உறவா? இது தெரியுமா உங்களுக்கு?

Summary:

Subaleka sudhakar and sp balasubramaniyam

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சுபலேகா சுதாகர். பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் 25 கும் மேற்பட்ட பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் நடிகர் சுபலேகா சுதாகர்.

1960 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் பிறந்த இவரது உண்மையான பெயர் சுதாகர். தெலுங்கில் இவர் அறிமுகமான சுபலேகா என்ற படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றிபெற்றது. அன்றில் இருந்து இவர் நடித்த சுபலேகா படமும் இவரது பெயருடன் சேர்ந்து சுபலேகா சுதாகர் என்றாகிவிட்டது.

தொலைக்காட்சியை பொறுத்தவரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள், கோலங்கள், ராஜ ராஜேஸ்வரி, இளவரசி, சித்தி, தென்றல், பவானி போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார்.

சினிமாவில் பிரபலமான இவர் பாடகி SP . சைலஜாவை திருமணம் செய்துகொண்டார். S.P. சைலஜா பிரபல பின்னணி பாடகர் S.P. பாலசுப்ரமணியத்தின் சகோதரி ஆவர்.  எஸ்.பி.பி. தங்கையை திருமணம் செய்து கொண்டதன் மூலம் எஸ்.பி.பி.யும் சுதாகரும் மாமன்– மச்சான் என்ற உறவு இவர்களுக்கிடையில் தொடங்கியது.


Advertisement