ரஜினிகாந்த் உத்தரப்பிரதேசம் முதல்வரின் காலில் விழுந்ததை குறித்து பிரபல நடிகையின் பகீர் பதிவு..Sri Reddy post about rajinikandh controversy

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து சூப்பர் ஸ்டார் எனும் அந்தஸ்து பெற்றிருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் தனது சினிமா வாழ்க்கையில் கஷ்டங்களை சந்தித்து இருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலை நாட்டியுள்ளார்.

Jayiler

இது போன்ற நிலையில், தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா போன்றவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியானது 'ஜெயிலர்' திரைப்படம். இப்படத்தின் மீது பல விதமான விமர்சனங்களை ரசிகர்கள் எடுத்து வைத்தாலும் படம் வெற்றி கொடிகட்டி வருகிறது.

இது போன்ற நிலையில், ஜெயிலர் திரைப்படத்திற்கு பின்பு இமய மலைக்கு சென்றிருந்த ரஜினிகாந்த் சமீபத்தில் உத்தரப்பிரதேச முதல்வர்  யோகி ஆதித்யநாத் அவர்களை சந்திக்க சென்றிருந்தார். அப்போது அவரது காலில் விழுந்து வணங்கினார். இந்த நிகழ்வு இணையத்தில் பரவி ரசிகர்களுக்கும், நெட்டிசன்களுக்கும் கோபத்தை தூண்டியது.

Jayiler

இதன்படி இந்த சர்ச்சை இணையத்தில் வேகமாக பரவியதால் இதனை குறித்து நடிகை ஸ்ரீ ரெட்டி பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில் அவர் கூறியதாவது, "ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலில் விழவில்லை அவர் குனிந்து வணங்கி தான் கொண்டிருக்கிறார்" என்ற பதிவை பார்த்து நெட்டிசன்கள் இணையத்தில் மேலும் கலாய்த்து வருகின்றனர்.