புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ஆறு வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வரும் ஸ்ரீ திவ்யா.. என்ன படம் தெரியுமா.?
10 தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஸ்ரீதிவ்யா, தனது மூன்றாவது வயதில் திரைத்துறைக்கு வந்தார். 2010ஆம் ஆண்டு ரவி பாபு இயக்கிய "மனசார" என்ற தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஆனார்.
இதனை தொடர்ந்து தமிழில் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" படத்தில் சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் ஜீவா, வெள்ளைக்காரத்துரை, காக்கிச்சட்டை, மருது, ஈட்டி, பென்சில், பெங்களூரு டேஸ் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
கடைசியாக 2017ம் ஆண்டு "சங்கிலி புங்கிலி கதவத் தொற" என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அவர் தமிழில் "ரெய்டு" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார்.
தீபாவளிக்கு வெளியாகவுள்ள படத்தில் அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார் இயக்குனர் முத்தையா வசனம் எழுதி, கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.