மீண்டும் ஹீரோவாகிறார் சூரி.! யாருடைய படத்தில் தெரியுமா.?Soori next movie update

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. வின்னர் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்த சூரி, அதன்பிறகு "வெண்ணிலா கபடிக்குழு" படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து பிரபலமடைந்தார். 

Soori

தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், சுந்தர பாண்டியன், ஜில்லா, ரஜினி முருகன், சீமராஜா என்று பல படங்களில் காமெடியில் கலக்கிய சூரி, வெற்றி மாறன் இயக்கிய பீரியட் கிரைம் திரில்லர் படமான "விடுதலை"யில் ஹீரோவாக நடித்தார்.

இந்தப் படத்தில் சூரியின் நடிப்பு, மிகவும் பேசப்பட்டது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற சூரி, தற்போது மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். துரை செந்தில்குமார் இயக்கும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. 

Soori

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன், மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன், சசிகுமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். வெற்றி மாறன் கதை எழுதியுள்ள இப்படம், ஒரு ஆக்க்ஷன் படமாக உருவாகி வருவதாகத் தெரிய வந்துள்ளது.