ஹீரோவாக அசத்தும் சூரி.. வைரலாகும் கருடன் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ.!Soori in karudan movie glimpse video viral

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்து வருபவர் சூரி. இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சூரி ஹீரோவாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Soori

அதன்படி, நடிகர் சூரி தற்போது விடுதலை 2, கொட்டுக்காளி, கருடன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கருடன் திரைப்படத்தை பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருடன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரும் மார்ச் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.