சினிமா

நாயை மையமாக கொண்டு உருவாகும் அன்புள்ள கில்லி! நாய்க்கு டப்பிங் கொடுத்தது யார்னு பார்த்தீர்களா!

Summary:

நாயே மையமாக கொண்டு உருவாகும் அன்புள்ள கில்லி திரைப்படத்தில் நடிகர் சூரி நாய்க்கு டப்பிங் கொடுத்துள்ளார்.

நடிகை சிவரஞ்சனியின் மகன் மைத்ரேயா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அன்புள்ள கில்லி. ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் உருவான இப்படத்தில்   துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, விஜே ஆஷிக், இளவரசு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம்  ஒளிப்பதிவு  செய்துள்ளார். அன்புள்ள கில்லி திரைப்படத்தில் லாபர்டா வகை நாய் முக்கிய கேரக்டரில் நடிக்கிறது. அந்த நாயின் பெயர்தான் கில்லி. நாயின் பார்வையிலேயே திரைக்கதை நகர்வது போன்று கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கதையில் முக்கியத்துவம் வாய்ந்த அந்த நாய்க்கு பிரபல முன்னணி காமெடி நடிகர் சூரி குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் கூறுகையில், இதுவரை உருவான மனிதன் மற்றும் நாய்க்கு இடையேயான உறவு தொடர்பான படங்களிலிருந்து இது முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். இந்நிலையில் இந்த நாய்க்கு மக்களிடையே நன்கு பரிச்சயமான ஒருவர் குரல் கொடுக்க வேண்டுமென எண்ணிய நிலையில் நடிகர் சூரியிடம் கேட்கப்பட்டது. அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார் எனக் கூறியுள்ளார்.


Advertisement