சினிமா

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி அளித்த சூரியின் பிள்ளைகள்! எவ்வளவு தொகை கொடுத்துள்ளனர் தெரியுமா??

Summary:

தமிழகம் முழுவதும் தற்போது  கொரோனா இரண்டாவது அலையாக பெருமளவில் பரவி கோரதாண்டவாடி வருகி

தமிழகம் முழுவதும் தற்போது  கொரோனா இரண்டாவது அலையாக பெருமளவில் பரவி கோரதாண்டவாடி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி தட்டுபாடு போன்றவை ஏற்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

மேலும் தற்போது தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்புபணிகள் மற்றும் நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களை வாங்க நிதி தேவைப்படும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தங்களால் இயன்ற நிவாரண நிதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும்  நிதியுதவி அளித்து வருகின்றனர்.

மகள், மகன் சார்பில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி வழங்கிய சூரி

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம்வரும் நடிகர் சூரி உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தனது சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார். மேலும் தனது மகள் வெண்ணிலா மற்றும் மகன் சர்வான் சார்பில் ரூபாய் 25 ஆயிரத்திற்கான ரொக்கத்தையும் வழங்கியுள்ளார்.


Advertisement