ரஷ்யாவில் தவித்த 200 தமிழ் மாணவர்களை தனது சொந்தசெலவில் மீட்டுவந்த பிரபல வில்லன் நடிகர்! குவியும் வாழ்த்துக்கள்!

ரஷ்யாவில் தவித்த 200 தமிழ் மாணவர்களை தனது சொந்தசெலவில் மீட்டுவந்த பிரபல வில்லன் நடிகர்! குவியும் வாழ்த்துக்கள்!


sonu-soot-rescue-200-tamil-students-from-russia-mascow

நாடு முழுவதும் கோரத்தாண்டவமாடி வரும் கொரோனாவால் ஏராளமானோர் தங்களது வேலைகளை இழந்து, சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பெருமளவில் சிரமப்பட்டு வந்தனர். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் தனது சொந்த பணத்தில், பலருக்கும் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்.

இவர் வேலைக்காக வந்து சிரமப்பட்டு வந்த புலம்பெயர் தொழிலாளர்களை தனது செலவிலேயே வாகனம் ஏற்பாடு செய்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். மேலும் கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தங்குவதற்காக தனது ஹோட்டலை இலவசமாக வழங்கினார். ஆந்திராவை சேர்ந்த ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுப்பது, காய்கறி விற்ற பெண் இன்ஜினியருக்கு வேலை வாங்கிக் கொடுப்பது மற்றும் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் கஷ்டப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பலருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவது என தொடர்ந்து தனது சேவையை ஆற்றி கொண்டுள்ளார்.

sonu soot

இந்த நிலையில் ரஷ்யா மாஸ்கோவில் மருத்துவம் படித்து வந்த 200 மாணவர்கள் படிப்பு காலம் முடிந்தபிறகும் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் பெருமளவில் சிரமப்பட்டு வந்துள்ளனர். அவர்கள் தங்களது நிலைமையை கூறி சோனு சூட்டிடம் உதவி கேட்டநிலையில், அவர் தனி விமானம் ஒன்று ஏற்பாடு செய்து அதன் மூலம் அவர்களை  சென்னைக்கு அழைத்து வர உதவியுள்ளார். 

இந்த நிலையில் விமானத்தில் பயணித்த அவர்கள் நடிகர் சோனு சூட் புகைப்படத்தை பிடித்து அவருக்கு நன்றி கூறிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.