வெள்ளத்தில் தந்தையை இழந்த 4 பெண் குழந்தைகளுக்காக நடிகர் சோனுசூட் செய்த காரியம்! குவியும் வாழ்த்துக்கள்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெர


sonu-sood-adopt-4-girl-child-who-missed-her-father-in-f

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார் நடிகர் சோனு சூட். இவர் பாலிவுட்டிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திரையுலகில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் நல்ல உள்ளம் படைத்த ஹீரோவாவார். இவர் வறுமையில் வாடுபவர்கள் மற்றும் கஷ்டப்படுபவர்களுக்கு தேடி சென்று ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தபோவன் ஹைட்ரோபவர் திட்டத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்த ஆலம் சிங் புண்டிர் என்பவர்  உயிரிழந்தார். அவரது  வருமானமே குடும்பத்தைக் காப்பாற்றி வந்த நிலையில் அவரது திடீர் உயிரிழப்பால் மனைவி உட்பட 4 பெண் குழந்தைகளும் நிலைகுலைந்து போனர். 

Sonu sood

இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் அவர்களுக்கு உதவுமாறு சோனு சூட்டிற்கு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த ஆலம் சிங்கின் அஞ்சல், அந்தரா, காஜல், அனன்யா ஆகிய 4 பெண் குழந்தைகளையும் சோனுசூட் தத்தெடுத்துள்ளார். மேலும் அவர்களது படிப்புச் செலவையும், வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து சோனு சூட் தனது டுவிட்டர் பக்கத்தில், இனி இந்தக் குடும்பம் என்னுடையது என பதிவிட்டுள்ளார். இவரது  பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.