சினிமா

6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர்..! இப்போ எப்படி இருக்கார் பாருங்க..

Summary:

6 ஆண்டுகளுக்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும், கொலையுருமாக வந்த நபர் ஒருவரின் தற்போதைய புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது.

6 ஆண்டுகளுக்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும், கொலையுருமாக வந்த நபர் ஒருவரின் தற்போதைய புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று சொல்வதெல்லாம் உண்மை. இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு முன் இந்த நிகழ்ச்சியில் தாய் ஒருவர் தனது மகனை காப்பாற்றும்படி இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

Madras High Court orders a stay on Tamil reality TV show 'Solvathellam Unmai'  until June 18

விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற முடியாமல் இருந்த இளைஞரை நிகழ்ச்சிக்கு கூடிவந்து, தன் மகனின் உயிரை எப்படியாவது காப்பாற்றிக்கொடுங்கள் என்று கண்ணீர் மல்க கேட்டிருந்தார். இந்த நிகழ்ச்சி நடந்து 6 ஆண்டுகள் முடிந்துள்ளநிலையில் அந்த இளைஞர் தற்போது எப்படி உள்ளார் என வியப்புடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

அந்த பதிவில், "குறிப்பிட்ட இளைஞர் தங்களின் நிகழ்ச்சிக்கு வந்ததாகவும், அவருக்கு அப்போலோ மருத்துவமனை 15 நாட்கள் இலவச சிகிச்சை வழங்கி, 2 மாதத்திற்கு தேவையான இலவச மருந்து மாத்திரைகளுடன் அவரை வீட்டுக்கு அனுப்பியதாகவும், பின்னர் வேறொரு மருத்துவரின் உதவியால் தற்போது அந்த இளைஞரின் வாழ்க்கையே நல்ல முறையில் மாறியிருப்பதாக" அந்த இளைஞரின் தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.


Advertisement