பிரபல தொகுதியில் போட்டியிடும் பிக் பாஸ் சினேகன்! எந்த தொகுதியில் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார் கவிஞர் சினேகன். பிக்பாஸ் முதல் சீசனின் போட்டியாளாராக கலந்து கொண்ட இவர் மக்கள் மத்தியில் மேலும் பிரபலாமானார். பிக் பாஸ் சீசன் ஒன்றில் இவர் நடந்துகொண்ட விதம் மக்கள் மனதை மிகவும் கவர்ந்தது. போட்டியின் இதுவரை சென்ற இவர் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் நடிகர் கமலஹாசனின் கட்சியான மக்கள் நீதி மைய கட்சியில் தன்னை சேர்த்துக்கொண்டார் கவிஞர் சினேகன். தற்போது நாடாளுமன்ற தேர்தலில் கவிஞர் ஸ்நேகனை களமிறக்கியுள்ளார் நடிகர் கமல். வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியில் போட்டியிடவுள்ளார் என கமல் அறிவித்துள்ளார்.
இதே தொகுதியில் பாஜக சார்பில் எச்.ராஜா மற்றும் காங்கிரஸ் சார்பில் பா.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகின்றனர். அவர்களை சினேகன் ஜெயிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் இந்த தேர்தலில் கமல் எந்த தொகுதியிலும் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.