வாவ்! நடிகை சினேகாவின் அம்மா, அப்பாவை பார்த்துருக்கீங்களா! அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான்!! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை சினேகா தனது பெற்றோருடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


snega-with-parents-photo-viral

தமிழ் சினிமாவில் என்னவளே  என்ற திரைப்படத்தில் நடித்ததன்  மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சினேகா. அதனை தொடர்ந்து அவர் ஆனந்தம், பார்த்தாலே பரவசம்,  விரும்புகிறேன், வசீகரா என தொடர்ந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் ரசிகர்களால் புன்னகை இளவரசி என அழைக்கப்பட்ட நடிகை சினேகா 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு விகான் என்ற 5 வயது ஆண் குழந்தை இருந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆத்யந்தா என்ற அழகிய பெண் குழந்தை  பிறந்தது.

Snega

இவ்வாறு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த  நடிகை சினேகாவின் பெற்றோர்கள் இராசாராம் மற்றும் பத்மாவதி. மேலும் சிநேகாவிற்கு அக்கா ஒருவரும் உள்ளார். இந்நிலையில் சினேகா தனது பெற்றோருடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் சினேகாவை போலவே அவரது குடும்பமும் செம கியூட் எனக் கூறி வருகின்றனர்.

Snega