வாவ்! என்னவொரு அழகு! முதன்முதலாக தனது செல்லமகளின் புகைப்படத்தை வெளியிட்ட சினேகா! தீயாய் பரவும் அழகிய புகைப்படம்!

வாவ்! என்னவொரு அழகு! முதன்முதலாக தனது செல்லமகளின் புகைப்படத்தை வெளியிட்ட சினேகா! தீயாய் பரவும் அழகிய புகைப்படம்!


snega-with-daughter-photo-viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சினேகா.  என்னவளே என்ற திரைப்படம் மூலம் தமிழ் அறிமுகமான இவர் விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை சினேகா பிரபல தமிழ் நடிகர் பிரசன்னாவை கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  அவர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. 

Snega

குழந்தை பிறந்ததிலிருந்து சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை சினேகா சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். அதனை தொடர்ந்து பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடன ரியாலிட்டி ஷோவிலும் நடுவராக இருந்தார்.

இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த சினேகாவுக்கு சமீபத்தில் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அவர்கள் ஆத்யந்தா என பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சினேகா தனது பெண் குழந்தையுடன் மிக அழகாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார். இந்த புகைப்படம் தீயாய் பரவிவருகிறது.