சினிமா

தனது அடுத்த வாரிசை களத்தில் இறக்கிய சிவகார்த்திகேயன்! பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்

Summary:

SK productions2 with rio

தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து இன்று தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தன்னை போல் வளர்ந்து வரும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரியோவை தனது SK புரோடக்‌ஷன்ஸ்-ன் இரண்டாவது படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் புதிதாக துவங்கியுள்ள SK புரோடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள முதல் படமான கனா திரைப்படம் வெளியாவதற்கான தயார் நிலையில் உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தனது நிறுவனத்தின் சார்பாக அடுத்த படத்திற்கான பூஜையை சிவகார்த்திகேயன் நேற்று நடத்தியுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியில் அறிமுகமாகி பின்னர் அதே தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக திகழ்ந்தார். பின்னர் தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் அறிமுகமாகிய சிவகார்த்திகேயன் இன்று தனக்கென்ன ஒரு ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார். சிறுவர்கள், இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் சிவகார்த்திகேயன். நடிப்பைத் தொடர்ந்து பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களை கொண்டவர் சிவகார்த்திகேயன்.

இதனைத்தொடர்ந்து தன்னைப் போலவே அதே தொலைக்காட்சியில் சின்னத்தொடரில் நாயகனாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் புகழ் பெற்று வரும் ரியோவை தனது SK புரோடக்‌ஷன்ஸ்-ன் அடுத்த தயாரிப்பில்  கதாநாயகனாக களமிறங்குகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இந்நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள முதல் படமான, ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ள கனா படம் வெளியாவதற்கு தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் சரவணன் மீனாட்சி புகழ் ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தினை இயக்குனர் கார்த்திக் வேணு இயக்குகிறார். ரியோ ராஜ் உடன் ஷெரின் காஞ்ச்வாலா, ராதாரவி, ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement