கவினுக்கு வில்லனாகும் நடிப்பின் அரக்கன்.. வெளியான அசத்தல் தகவல்.!SJ Surya negative role in Kavin movie

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் கவின். இதனைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் கிடைத்தது. தொடக்கத்தில் ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த கவினுக்கு தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.

sj surya

அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளியான லிஃப்ட் மற்றும் டாடா ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக திரையரங்குகளில் வெளியான டாடா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

இந்த நிலையில் தற்போது இவர் பிரபல நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

sj surya

இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் நெல்சன் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.