சினிமா

இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது குறித்து சிவகுமார் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? வீடியோவை நீங்களே பாருங்க.!

Summary:

sivakumar explain about knock the mobile

செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டி விட்டது குறித்து நடிகா் சிவக்குமார் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள கருத்தரிப்பு மையம் திறப்பு விழாவில் நடிகர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் ஆா்வத்துடன் வந்து சிவக்குமாருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனா்.அப்பொழுது  இளைஞா் ஒருவரும் சிவக்குமாருடன் புகைப்படம் எடுக்க முயன்றார்.

 அப்போது கோபமடைந்த சிவக்குமார் அந்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்டார். இதில் செல்போன் கீழே விழுந்து சிதறியது.மேலும் இளைஞன் செய்வதறியாது திகைத்து போய் நின்றார்.

மேலும் இந்த வீடியோ  சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சிவகுமாருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது.

இவ்வாறு கண்டனங்கள் எழுந்த நிலையில் இதுகுறித்து சிவக்குமார் தற்போது விளக்கம் அளித்துள்ளார் அதில், “ஆர்வமிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்கா கூட்டத்தில் அப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொள்வார்கள், ஒரு பிரபல கலைஞர் அதையெல்லாம் பொறுத்து கொள்ளவேண்டும். என்ன இருந்தாலும் சிவகுமார் செல்போனை தட்டிவிட்டது தவறு என்று பெரும்வாரியான மக்கள் நினைப்பதால் எனது செயலுக்காக நான் உளமார வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் மன்னித்து விடுங்கள் என கூறியுள்ளார்.


Advertisement