"சிவகார்த்திகேயனுக்கு என்னாச்சு?" வைரல் போட்டோவை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்.!



sivakarthikeyan-viral-photos

விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் சிவ கார்த்திகேயன். இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான "மெரினா" திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் இவர் பாடலாசிரியராகவும், பாடகராகவும் பன்முகத் திறமையாளராக உள்ளார்.

Siva

தொடர்ந்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் தன் இயல்பான மற்றும் நகைச்சுவையான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

இந்நிலையில், சிவ கார்த்திகேயனின் 21ஆவது படம், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும், படத்திற்கு தற்காலிகமாக 'எஸ்கே 21' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவ கார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கப்போவதாக கூறுகின்றனர்.

Siva

இந்நிலையில், நேற்று முன்தினம் அசோக் செல்வனுக்கும், கீர்த்தி பாண்டியனுக்கும் நடந்த திருமண வரவேற்பில் பல பிரபலங்களுடன் சிவ கார்த்திகேயனும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது ஆளே அடையாளம் தெரியாதபடி, முகம் வாடிய நிலையில் உள்ள சிவ கார்த்திகேயனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.